திருச்சிற்றம்பலம் வெற்றிக்கு பிறகு வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா நடித்திருக்கும் படம் “வாத்தி”. ஜீ.வி.பிரகாஷின் பாடல்கள் இடம்பெற்றிருக்கும் வாத்தி படம் இன்று(பிப்,.17) வெளியாகி உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் வாத்தி படம் வெளியாகும் சுமார் 5000-க்கும் அதிகமான திரையரங்குகளில் படத்தின் இடைவெளியில் கியூப் வொயர் வாயிலாக தளபதி விஜய்-லோகேஷ் கூட்டணியில் உருவாகி வரும் லியோ படத்தின் டைட்டில் அறிவிப்பு டீசர் அடங்கிய வீடியோ திரையிடப்பட இருக்கிறது. இதற்கென அந்த டீசர் சென்சார் செய்யப்பட்டுள்ளது. முன்பே youtube-ல் கடந்த 3-ம் தேதி இந்த டீசர் வெளியிடப்பட்டு சுமார் 12 தினங்களில் 4 கோடிக்கும் மேலான பார்வையாளர்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/rajatalkiespdy/status/1625895850131226624?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1625895850131226624%7Ctwgr%5Ef185f7f22ad632b9fea1de0eb91bd59b1b54227b%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.puthiyathalaimurai.com%2Fnewsview%2F155602%2FVijay-s-Leo-title-teaser-censored-video-to-be-screened-during-Dhanush-s-Vaathi