தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் தளபதி விஜய்யின் வாரிசு மற்றும் தல அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையும் குவித்தது. இற்கிடையில் வாரிசு, துணிவு படங்களின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறித்த தகவல்கள் என்னவாக இருக்கும் என்று வாக்குவாதங்கள் தொடர்ந்து வருகிறது.

இதில் தளபதியின் வாரிசு திரைப்படம் வசூல் குறித்த தகவல் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருக்கிறது. அதாவது, வாரிசு மொத்தம் 306 கோடியே 1 லட்சம் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் தமிழகத்தில் மொத்தம் 147 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வாரிசு வாயிலாக ரூ.400 கோடி கலெக்ஷன் பார்க்கலாம் என விஜய் எதிர்பார்த்துள்ளார்.

ஏனென்றால் அவரது முந்தைய திரைப்படமான பீஸ்ட் கலவையான விமர்சனங்களை சந்தித்து இருந்தாலும் 290 முதல் 300 கோடி வரையில் வசூல் செய்தது. இதனால் வாரிசு திரைப்படத்துக்கான எதிர்பார்ப்பையும் சற்று உச்சத்திலேயே கணக்கிட்டு வைத்திருந்தாராம் விஜய். எனினும் கள நிலவரம் வேறு மாதிரியாக அமைந்துள்ளது என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.