தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் காஷ்மீரில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார். வருகிற ஆயுத பூஜைக்கு வெளியாக உள்ள இந்த படத்தின் ஒரு சில அப்டேட்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகிறது. தளபதி விஜய்யின் நடிப்பில் கடந்த மாதம் வெளியாகிய வாரிசு படம் பற்றிய சூப்பரான தகவல் இப்போது வைரலாக பரவி வருகிறது.

அதன்படி, வம்சி இயக்கத்தில் பேமிலி என்டர்டைன்மென்ட் படமாக சென்ற மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிய வாரிசு திரைப்படம் உலகளவில் 300 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்து வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. வாரிசு படம் சன் நெக்ஸ்ட் தளத்தில் வருகிற பிப்ரவரி 22ம் தேதி வெளியாக உள்ளதாக இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரவபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.