திருச்சிற்றம்பலம் வெற்றிக்கு பிறகு வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா நடித்திருக்கும் படம் “வாத்தி”. ஜீ.வி.பிரகாஷின் பாடல்கள் இடம்பெற்றிருக்கும் வாத்தி படம் இன்று(பிப்,.17) வெளியாகி உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி இருக்கிறது. தனியார் பயிற்சி வகுப்புகளை தரமானதாக மாற்றுவதற்கு அரசு பள்ளிகளிலுள்ள நல்ல ஆசிரியர்களை தனியார் பயிற்சி வகுப்புகளில் பெரிய தொகைகளுக்கு பணியமர்த்துகின்றனர்.

இதன் காரணமாக அரசு பள்ளிகளில் தகுதியான ஆசிரியர்கள் இன்றி, ஒரு கட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதையடுத்து அரசு பள்ளிகளை மூடவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனை கருதி தனியார் பயிற்சி மையங்களுக்கு கட்டணம் உள்ளிட்ட கெடுபிடிகளை அரசு நடைமுறைபடுத்துகிறது. அந்த கூட்டமைப்பின் தலைவராகவுள்ள சமுத்திரகனி, அரசின் கெடுபிடியை முறியடிக்க புது திட்டம் போடுகிறார்.

அரசு பள்ளிகளை தத்து எடுப்பதாக அறிவித்து தன்னிடம் இருக்கும் 3ம் தர ஆசிரியர்கள் மூன்று பேரை கடப்பாவிலுள்ள அரசுப் பள்ளிக்கு அனுப்புகிறார். மாணவர்களை தேர்ச்சியடைய வைத்தால்தான் இன்கிரிமென்ட் தரப்படும் என்பது மாதிரியான நிபந்தனைகள் உடன் அவர்கள் செல்கிறார்கள். அந்த 3 பேரில் தனுஷூம் ஒருவர் ஆவார்.

அந்த பகுதியில் இருப்பவர்கள் பள்ளிக்கு வர விரும்பாதவர்கள். வழக்கம் போன்று அவர்களுக்கு அறிவுரை சொல்லி, பள்ளிக்கு வர வைக்கிறார் தனுஷ். பள்ளிக்கு வந்தால் டீச்சர் இருப்பாங்க, அவங்களை காதலிக்கிற வேலையும் கட்டாயம் தனுஷூற்கும் இருக்கும் என்பது தெரிந்ததுதான். ஆசிரியர் பணியோடு அப்பணியும் சேர்கிறது.

ஒருக்கட்டத்தில் ஜாதி தகராறு ஏற்பட்டு தனுஷ் உடன் வந்த மற்ற 2 ஆசிரியர்களும் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கின்றனர். தனித்து நிற்கும் தனுஷிற்கு பிறகு தான் , சமுத்திரகனியின் தவறான நோக்கம் தெரியவருகிறது. ஆகவே சமுத்திரகனியின் திட்டம் நிறைவேறியதா..? தனுஷ் சாதித்தாரா..? அரசுப் பள்ளி மாணவர்களின் நிலை என்ன ஆனது..? என்பது தான் வாத்தி படத்தின் மீதி கதை ஆகும்.