ரயில் நிலைய கவுண்டர்களில் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் UTS செயலி மூலமாக முன்பதிவில்லாத ரயில், நடைமேடை மற்றும் சீசன் டிக்கெட் ஆகியவற்றை பெற முடியும். அதில் ஜியோ ஃபென்சிங் எனப்படும் வெளிப்புற எல்லையை தற்போது ரயில்வே நிர்வாகம் நீக்கி உள்ளது. இதனால் ரயில் நிலையம் தவிர வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் டிக்கெட் எடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் பயணத்தை தொடங்க வேண்டும்.