நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதால் அதிலிருந்து  தங்களை பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பிரத்தியேகமான வாடிக்கையாளர் விழிப்புணர்வு கையேடு ஒன்றை தமிழில் வெளியிட்டுள்ளது. அதில், பலவிதமான ஆன்லைன் மோசடி குறித்தும் அதிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி ? விழிப்புடன் எப்படி செயல்படுவது ? என்பது உள்ளிட்ட முக்கியமான கேள்விகளுக்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  தனிப்பட்ட தகவல்கள் & வங்கியியல் தகவல்களை முன்பின் தெரியாதவரிடம் பயனாளர்கள் தெரிவிக்கக்கூடாது என SBI அறிவுறுத்தியுள்ளது. அவையாவன, 

தனிப்பட்ட தகவல்கள் : முழு பெயர், பான் எண், ஆதார் எண், குறியீடு, முகவரி, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, பாலினம் 

வங்கியியல் தகவல்கள் : கணக்கு எண்,  ஐஎஃப்எஸ்சி குறியீடு, கிரெடிட் கார்டு எண்,  காலாவதியாகும் தேதி,  சிவிவி,  ரகசிய எண் உள்ளிட்டவற்றை முன்பின் தெரியாதவர்களிடம் வழங்கக்கூடாது என SBI அறிவுறுத்தியுள்ளது.

மேலும் இது குறித்து விரிவாக தெரிந்து சொல்ல SBI-ன் அதிகார பூர்வ பக்கத்திற்கு சென்று தெரிந்து கொள்ளவும். 

https://imagescommunications.sbi.co.in/14999669/SBI_Cyber_Security_Booklet_Tamil.pdf