நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதால் அதிலிருந்து  தங்களை பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பிரத்தியேகமான வாடிக்கையாளர் விழிப்புணர்வு கையேடு ஒன்றை தமிழில் வெளியிட்டுள்ளது. அதில், பலவிதமான ஆன்லைன் மோசடி குறித்தும் அதிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி ? விழிப்புடன் எப்படி செயல்படுவது ? என்பது உள்ளிட்ட முக்கியமான கேள்விகளுக்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  

ஜிடி ரிட்டன் மோசடி குறித்து SBI கூறுவதாவது, ஜிடி ரிட்டன் மோசடி என்பது பரவலாக காணப்படும் ஒரு வகையான மோசடியாகும். வருமான வரி திரும்ப பெறுதலை துவக்க ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் படி கேட்டு பயனர்களுக்கு இணைய குற்றவாளிகள் மொத்தமாக எஸ்எம்எஸ்களை அனுப்புகின்றனர். இந்த மெசேஜ்களில் ஒரு லிங்க் இருக்கும். அது அதிகாரப்பூர்வ வருமான வரி மின் தாக்கல் இணையதளம் போலவே தோற்றமளிக்கும், ஓர் இணைய பக்கத்திற்கு பயனர்களை அழைத்துச் சென்று,  முக்கிய தரவுகளை சமர்ப்பித்த பிறகு,

பணத்தை பெற ஒரு ஆப்பை உங்கள் மொபைலில் நிறுவுமாறு பயனர்களுக்கு மோசடிகாரர்கள் அறிவுறுத்துவார்கள்.  பயனர் சாதனத்தின் முழு கட்டுப்பாட்டையும் எடுத்துக் கொள்ளும் விதத்தில், சாதனத்தின் நிர்வாக கட்டுப்பாடு மற்றும் மின்னஞ்சல் செய்திகளை படிப்பது, அழைப்பு பதிவுகள் பெறுவது, போன்ற பிற அனுமதிகளையும் தீங்கிழைக்கும் இந்த ஆப் கேட்கும். இந்த விவரங்கள் மற்றும் மொபைல் மீதான கட்டுப்பாட்டை கொண்டு அவர்கள் உங்கள் கணக்கின் மூலம் மோசடி பரிவர்த்தனைகளை செயல்படுத்துகிறார்கள்.

எப்போதும் இத்தகைய எஸ்எம்எஸ் களுக்கு பதில் அளிக்கும் முன் அவை சரியானவை என உறுதி செய்து கொள்ளவும். இணைய முகவரியை டைப் செய்து அதிகாரப்பூர்வ ஐடி ரிட்டன் இணையதளம் தானா ? என்பதை உறுதி செய்த பின் அடுத்த கட்ட நகர்வை தொடரவேண்டும். ஏதேனும் சந்தேகம் எழுந்தால், உடனடியாக தயக்கம் காட்டாமல் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும் என SBI தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து விரிவாக தெரிந்து சொல்ல SBI-ன் அதிகார பூர்வ பக்கத்திற்கு சென்று தெரிந்து கொள்ளவும். 

https://imagescommunications.sbi.co.in/14999669/SBI_Cyber_Security_Booklet_Tamil.pdf