அமெரிக்க உக்ரைன் நாட்டிற்காக மேலும் 20,000 கோடி மதிப்பு கொண்ட ராணுவ உதவியை அளிப்பதாக அறிவித்துள்ளது.

ரஷ்யா போரை தொடங்கியதிலிருந்து உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா பெரிதும் உதவியாக இருக்கிறது. அமெரிக்கா அளிக்கும் அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தி உக்ரைன், கடந்த ஒரு வருடமாக ரஷ்யாவை துணிச்சலுடன் எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், கூடுதலாக 2.5  பில்லியன் டாலர்கள் மதிப்பில் ராணுவ உதவியை உக்ரைன் நாட்டிற்கு அளிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அமெரிக்க ராணுவம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, கடந்த 2021 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் ராணுவ தளவாடங்கள் உக்ரைன் நாட்டிற்கு அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தற்போது முப்பதாம் தொகுப்பாக இராணுவ தளவாடங்கள் அளிக்கப்படவிருக்கிறது.

புதிதான இந்த தொகுப்பில் 59 பிராட்லி காலாட்படை சண்டை வாகனங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள், அதிநவீன பீரங்கிகள், ராக்கெட் அமைப்புகள் மற்றும் ஸ்ட்ரைக்கர் கவச வாகனங்கள் போன்றவை இருக்கும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.