
யுபிஎஸ்சி தேர்வாணையத்தால் 2023 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட நிலையில் இந்த தேர்வு முதல் நிலை, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் என மூன்று பிரிவுகளாக நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதல் நிலை தேர்வு பிப்ரவரி 21ஆம் தேதி நடத்தப்பட்ட நிலையில் ஜூன் மாதம் தேர்வு முடிவுகள் வெளியானது.
இதனைத் தொடர்ந்து முதன்மை தேர்வு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடத்தப்பட்ட நிலையில் இந்த தேர்வுகளுக்கான முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன் முடிவுகளை தேர்வர்கள் https://upsc.gov.in/index.php என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மூன்றாம் நிலையான நேர்காணல் என்ற முகவரியில் உள்ள யுபிஎஸ்சி ஆணையத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.