மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் SFIO, CBI, NIA போன்ற அரசு அலுவலகங்களில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த பணியிடங்களுக்கான 96 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் யூபிஎஸ்சி தேர்வாணையத்தால் நடத்தப்படும் Combined recruitment test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளது. இந்த தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இந்த தேர்வு வருகின்ற அக்டோபர் 7ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை நடைபெறும். இந்த தேர்வு ஆஃப் லைன் முறையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து கூடுதல் விவரங்களை https://upsc.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.