தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் பல்வேறு ரயில் சேவைகளின் நேரம் அக்டோபர் 1 அதாவது இன்று முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மற்றும் நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை காரணமாக பல்வேறு ரயில் சேவைகளின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 34 விரைவு ரயில் சேவைகளின் பயண நேரம் மற்றும் கால அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. எனவே தெற்கு ரயில்வே ரயில் சேவைகள் மாற்றம் குறித்து https://sr.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.