டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்ளரங்கில் மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரை நினைவு கூறும் விதமாக ஓராண்டு நடைபெறும் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பூஜைகள் மற்றும் யாகங்கள் செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதன் பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் பிரதமர் மோடி பேசினார்.

அவர் பேசியதாவது, உலகின் வளர்ச்சியை நோக்கி செல்பவர்களில் நாமும் ஒருவராக இருப்போம் என மகரிஷி தயானந்த சரஸ்வதி கூறினார். இந்தியாவின் மகளிருக்கு அதிகாரம் அளிப்பதற்கு அவர் குரல் கொடுத்தார். சமூக வேற்றுமை, தீண்டாமை மற்றும் அது போன்ற பல சீர்கேடுகளுக்கு எதிராக அவர் குரல் கொடுத்தார். நாட்டின் இன்றைய மகள்கள் ரஃபேல் போர் விமானத்தில் கூட பறக்கிறார்கள். ஏழைகள் மற்றும் விளிம்பு நிலையில் இருப்பவர்களை கை தூக்கி விடுவதே முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்று கூறினார்.