ஆந்திரா நெல்லூரில் வசித்து வருபவர் வினுகொண்டா பானு சாய் பிரதாப். இவர் விஜயவாடாவிலுள்ள மென் பொருள் நிறுவனத்தில் வெப் டெவலப்பராக பணிபுரிந்து வருகிறார். இதற்கிடையில் மென்பொருள் துறையில் புதியதாக சாதனை படைக்கவேண்டும் எனும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார் வினுகொண்டா. அதிலும் குறிப்பாக குறைந்த நேரத்தில் அதிக வலைப்பக்கங்களை உருவாக்குவது பற்றி அவர் கற்று வந்துள்ளார்.

இந்நிலையில் கணினியில் 22 வலைப்பக்கங்களை (வெப் பேஜ்) 6 மணி நேரத்தில் உருவாக்கி சாதனை படைத்துள்ளார் வினுகொண்டா. இதனை சென்னையை அடிப்படையாக கொண்டு இயங்கும் லிங்கன் புக் ஆஃப் ரெக்காரட்ஸ் நிறுவனம் அங்கீகரித்து உள்ளது. அதோடு வினுகொண்டாவின் சாதனையை பாராட்டி தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கியுள்ளது.