ஓபிஎஸ் அணி சார்பில் நமது புரட்சித் தொண்டன்” புதிய நாளிதழ் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய பத்திரிக்கையாளர் ரவீந்திரன் துரைசாமி, ”நமது புரட்சி தொண்டன்” இதழில் முதலில் போட்டது அதிமுக தொண்டர்கள் 80 சதவீதம் பேர் ஓ.பன்னிர் செல்வதை ஆதரிக்கிறாங்கனு ஆரம்ப கட்டத்திலே இருந்தது. கால சூழ்நிலைல  சில இடர்பாடுகள் வந்தாலும் கூட, அந்த தொண்டர்கள் மனசுல இவர்  நல்ல மனிதர். இவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாக்கு பிறகு இந்த கட்சியை வழி நடத்துறதுக்கு தகுதியானவர் என்கின்ற எண்ணம் கண்டிப்பா இருக்குது.

இதை நான் மட்டும் சொல்லல. என்கூட இருக்கின்ற… என்னுடைய அரசியலலை ஆழ்ந்து பாக்க கூடிய நண்பர்கள்…  நாகர்கோயில் கோபால்,  கே.எஸ் மணி போன்ற நண்பர்களும் இந்த கருத்துக்களை தெளிவா சொல்லுறாங்க. நிச்சயமா அவர் பின்னால ஒரு கூட்டம் நிக்கும். வாக்காளர்கள் அவரை தான்  நம்புவார்கள் என்று களத்துல இருந்து அரசியலை பேசக்கூடிய பல நண்பர்களும் சொல்லுறாங்க.

2024இல் இவரை தள்ளிட்டா இவரு ஒதுங்கிருவாரு. நாம அபகரிச்சிரலாம் என நினைத்தவர்களுக்கு சிம்ம சொப்பனமா…. மக்கள் ஆதரவுல அவர் இருந்துட்டு இருக்காரு. 2024 தேர்தல் களம் 2026யை முடிவு செய்யக்கூடிய ஒரு களமாக இருக்கும். 2026க்கு ஒரு முன்னோடியா…  2024 களம் இருக்கும். எந்த திசையில் அணிகள் அமைஞ்சாலும்,  ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தவிர்க்க முடியாத ஒரு சக்தி என்கின்ற  அடிப்படையில் இருக்கிறார்.

என்னுடைய தனிப்பட்ட விருப்பம். அவர் மோடி தலைமையிலான அணியில் வரணும் என்பது… என்னுடைய தனிப்பட்ட விருப்பம். அது வேற ,அதுல உங்கள்ள பலருக்கு மாறுபட்ட கருத்து இருக்கும்,  கோபங்கள் இருக்கும்,  அதை நான் வற்புறுத்த விரும்பல, எப்படி அரசியல் சூழ்நிலை அமைந்தாலும் கூட… இந்த இயக்கம் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம்  அவர்கள் அசைக்க முடியாத ஒரு பெரிய சக்தியாக 2024ல் நிரூபிப்பாரு.  அதனை மையமாக வெச்சி  2026இல் தமிழக அரசியல் களத்தில் ஒரு முதல்வர் வேட்பாளராக உறுதியாக பிரதிபலிப்பார் என தெரிவித்தார்.