ஓ.பி.எஸ் அணி சார்பில் தொடங்கப்பட்ட”நமது புரட்சித் தொண்டன்”புதிய நாளிதழ்  வெளியீட்டு விழாவில் பேசிய மூத்த தலைவர் பண்ருட்டி இராமச்சந்திரன்,  புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு கட்சியை கிடையாது. அவரை தூக்கி வெளியிலே எறிந்த போது அவருக்கு ஏது கட்சி ? மக்கள் செல்வாக்கு என்பது ஏற்கனவே இருந்தது. அதை எடுத்து வைப்பதற்கு ஒரு கட்சி தேவைப்பட்டது.

சட்டியிலே இருந்தது,  இலையிலே போடுவதற்கு அகப்பை தேவை. அந்த அகப்பை தான் கட்சி. இப்பொழுது கம்யுனிஸ்ட் கட்சி என்றால் ? அவர்கள் ஒரு தத்துவத்தை சொன்னார்கள் . அந்த தத்துவத்தை ஏற்றுக் கொண்டவர்கள் உறுப்பினர் ஆகிறார்கள். அவர்கள் கட்சி. புரட்சி தலைவருடைய கட்சி அப்படியல்ல… அவருக்குனு ஏற்கனவே செல்வாக்கு.

அந்த செல்வாக்கை பயன்படுத்துவதற்கு ஒரு கட்சி, அவருக்கு தேவை. இன்றைக்கு நம்முடைய ஓபிஎஸ் அவர்களுக்கு அது தான் நிலைமை.  ரவீந்திரன் துரைசாமி அவர்கள் சொன்னதை போல நமக்கு செல்வாக்கு இருக்கிறது. மக்கள் இருக்கிறார்கள்.

கட்சி தொண்டர்கள் இருக்கிறார்கள். அனால் அகப்பை இல்ல, அகப்பை நமக்கு வேணும். அகப்பை மட்டும் இருந்து என்ன பிரயோஜனம் ? வெறும்  சட்டியில் அகப்பையை சுற்றினால் சட்டி தான்  உடையுமே தவிர அகப்பைக்கு ஒன்னும் வராது. ஆகையினாலே…  அவர்கள் வழியிலே எந்த அளவுக்கு தொண்டர்களை முக்கியமாக கருதினார்கள் என்று பாருங்கள் என தெரிவித்தார்.