திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுண்டக்காம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ஆனந்த். அதே பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் மக்காச்சோளம் அரைக்கும் ஆலை நடத்தி வருகிறார். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் தனது ஆலையை விரிவாக்கம் செய்வதற்காக சுண்டக்கம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.. அதற்கு அனுமதி வழங்க ஊராட்சி மன்ற தலைவர் லஞ்சம் கேட்டுள்ளார். முன்பணமாக ஒரு லட்ச ரூபாய் கொடுக்கப்பட்டது. மீதமுள்ள பணத்தையும் கொடுத்தால் தான் அனுமதி வழங்கப்படும் என ஆனந்த் தெரிவித்தார்.

இதுகுறித்து ராதாகிருஷ்ணன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தை ராதாகிருஷ்ணன் ஆனந்திடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊராட்சி மன்ற தலைவரை கையும் களவுமாக பிடித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஆனந்தை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரபபை ஏற்படுத்தியுள்ளது.