திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து ஆணையர் உத்தரவின் படி ஆட்டோ ஓட்டுநர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி ஆனந்த தலைமை தாங்கினார். இந்நிலையில் பாதுகாப்பாக பயணம் செய்வது, விபத்துக்களை தடுக்கும் வகையில் காலை விதிகளை பின்பற்றுவது, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து ஆட்டோவில் அதிக அளவு பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் ஓட்டுநர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என வட்டார போக்குவரத்து அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் திருப்பூர் தெற்கு மோட்டார் வாகன ஆய்வாளர் நிர்மலா மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.