ஆதார் கார்டை பயன்படுத்துபவர்கள் அப்போது தங்கள் ஆதார் எண்களை sms வாயிலாக லாக் மற்றும் அன்லாக் செய்துக்கொள்ளலாம். அப்படி செய்தால் உங்களது ஆதார் கார்டு விபரங்களை யாராலும் தவறாகப் பயன்படுத்த இயலாது. ஆதார் கார்டை லாக் செய்யும் செயல்முறையானது மிகவும் எளிமையான ஒன்று. ஒரு நபரின் ஆதார் அட்டை லாக் செய்யப்பட்ட பின் அந்த ஆதார் எண்ணை யாரும் பயன்படுத்த இயலாது.

மேலும் அதன் வாயிலாக எவ்வித சரிபார்ப்பையும் மேற்கொள்ள முடியாது. ஆதார் கார்டை லாக் செய்த பின் ஏதேனும் சரிபார்ப்பு செயல்முறை செய்ய வேண்டி இருந்தால் நீங்கள் சரிபார்ப்பிற்கு விர்ச்சுவல் ஐடென்டிபிகேஷனை பயன்படுத்த வேண்டும். இந்த அமைப்பு உங்களது ஆதார் அட்டைகளை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க உதவும்.