ஹோலி பண்டிகையையொட்டி மக்கள் சந்தோஷமாகவுள்ள நிலையில், மத்திய அரசு தன் ஊழியர்களை குஷிப்படுத்தும் வகையில் ஒரு செய்தியை அறிவிக்கப் போகிறது. அதன்படி, இன்னும் 15 நாட்களில் மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு இதுவரை அரசு ஊழியர்கள் வைத்த கோரிக்கைகளுக்கும் மத்திய அரசு தீர்வுகாணும் எனவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

வரும் மார்ச் 1ம் தேதி நடைபெறவுள்ள அடுத்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வு பற்றிய பெரிய முடிவை அரசு எடுக்கும் என சொல்லப்படுகிறது. கடந்த 2022 ஆம் வருடம் செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசு அகவிலைப்படியை 4% உயர்த்தியதும், DA 38 சதவீதம் ஆக அதிகரித்தது. இப்போது வெளியாகியுள்ள செய்திகளின் படி, மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு இம்முறையும் 4% அகவிலைப்படியை உயர்த்தும் என கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரபூர்வமான தகவல்கள் எதையும் அரசு இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.