உலகிலேயே மிகக் கொடிய நோய்களில் மிக முக்கியமான ஒன்று மாரடைப்பு ஆகும். எவ்வளவு கொடிய நோயாக இருந்தாலும் அதிலிருந்து தப்பித்து விடலாம் ஆனால் மாரடைப்பு வந்தால் அடுத்த நொடியே உயிர் போய்விடுகிறது. ஒருசிலரோ குறிப்பிட்ட நேரத்தில் சரியான முதலுதவி சிகிச்சை கொடுப்பதால் உயிர் பிழைக்கிறார்கள். சமீபகாலமாகவே இந்தியாவில் நாளுக்கு நாள் மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அந்தவகையில் குஜராத்தின் பாவ்நகரில் திருமண நிகழ்ச்சியின் போது பெண் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இறந்த பெண்ணின் தங்கையை மணமகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த குடும்பத்தினர், திருமணம் முடியும் வரை அவரது உடலை குளிர்பதன பெட்டியில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. சமீபகாலமாக இளவயது மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.