உக்ரைனின் சார்பாக கூலிப்படை வீரராக செயல்பட்டதாகக் கூறப்படும் 72 வயதான அமெரிக்கர் ஸ்டீபன் ஹப்பார்ட், ரஷ்ய படைகளால் கைது செய்யப்பட்டு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். 2022 பிப்ரவரி மாதம் உக்ரைனின் இசியம் பகுதியில் உக்ரைனிய பாதுகாப்பு குழுவுடன் ஒப்பந்தம் செய்து மாதத்திற்கு $1,000 சம்பளம் பெறுவதாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் எப்போது மற்றும் எவ்வாறு மாஸ்கோவுக்கு கொண்டு வரப்பட்டார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்நிலையில் போர் தொடங்கிய சில மாதங்களில், ஏப்ரல் மாதத்தில் ஸ்டீபன் ஹப்பார்ட் கைது செய்யப்பட்டார். மூடிய கதவுகளுக்குள் நடந்த விசாரணையின் முடிவில், உக்ரைனின் சார்பாகச் சண்டையிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஸ்டீபனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை, ரஷ்யாவின் மேற்கு நாடுகளுடனான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்திற்கு பிறகு வழங்கப்பட்டது.
மேலும் தற்போதைய தகவலின் அடிப்படையில், ஸ்டீபன் ஹப்பார்ட்டை சேர்த்து 10 அமெரிக்கர்கள் ரஷ்ய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.