
அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி கொள்ளை அடித்து, ஏப்பம் விட்ட கட்சி என்று, சொல்லாமலே சொல்றாங்க. அதைத்தான் தலைவர் அன்னைக்கே பாட்டு பாடியிருக்கிறார். சத்தியம் தவறாத உத்தமன் போல நடிக்குறாரு. மேடையில பேசும் பொது பாருங்க… எங்க ஆட்சியை பற்றி யாராவது குறை சொல்ல முடியுமா ? சொல்லுவீங்களா ? என கூப்பிட்டு வந்த கூட்டத்தை பார்த்து கேட்குறாரு… அவுங்க எல்லாரும் நலத்திட்டம் வாங்கணும்னு இல்லை… இல்லைன்னு சொல்லுறாங்க…
”சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்” எந்தெந்த துறையில் எவ்வளவு கமிஷன் வாங்கலாம் என்பதை பார்த்து செய்யறாங்க அப்படின்னு.. தலைவர் 1954 இல் சொல்லுறாரு… பகுத்தறிவு பேசி…. பகல் வேஷம் காட்டி…. பாமர மக்களை தன் வலையில் மாட்டி சிக்க வைக்கிறார். அவர் பகுத்தறிவு பேசுவாரு…. அவர் மகன் பகுத்தறிவு… ஆனால் வீட்ல பார்த்தால் சாமி கும்பிடுவாங்க…. சாமியார் காலில் விழுவாங்க…. அன்னை துர்கா என்ன செய்வாங்க ? கோவில் கோவிலா போவாங்க… போறாங்களா ? இல்லையா ?
நான் சும்மா சொல்றேன்னா என பொங்கிய செல்லூர் ராஜீ வீடியோ எடுத்துக்கொண்டு இருந்த ஊடகவியலாளரை பார்த்து ஊடகப் பெருமக்கள் சொல்லுங்க ….போறாங்களா ? இல்லையா ? என பேசினார். பகுத்தறிவு பேசுவாரு… சனாதனம் பேசுவாரு… தலைவர் MGR படுறாரு… தெருவு எங்கும் பள்ளிகள்… தன்னுடைய கொள்கையை சொல்றாரு… சத்துணவு திட்டத்தை அப்பவே கொண்டு வந்தாரு. தெருவு எங்கும் பள்ளிகள் கட்டுவோம்…. தலைவர் காலத்தில் பள்ளிகள் எல்லாம் நிறைந்தது… நிறைய மாணவர்கள் சேர்ந்தாங்க…
கல்வி தெரியாத பெயர்களே இல்லாமல் செய்வோம்…. அதற்கு தான் சத்துணவு திட்டம்…. கருத்தாக பல தொழில் பயில்வோம்…. அம்மா மடிக்கணினி கொடுத்தாங்களா ? இல்லையா ? ஊரில் கஞ்சிக்கு இல்லை என்ற சொல்லினை போக்குவோம். எவனும் பசி இல்லாம இருக்கணும் அதுக்கு தான் அம்மா உணவகம்…. விலையில்லா அரசி… இன்னிக்கு இருக்கா ? இல்லையா ? வாங்குறீங்களா ? இல்லையா ? விலை இல்லா அரிசி… பசி இல்லாமல் போக்குவோம்…. ஆளுக்கொரு வீடு கட்டுவோம்… தலைவர் காலத்திலே அதை கொண்டு வந்து நிறைவேற்றினார்…
ஆய கலைகள் சீராக பயில்வோம்… சிறப்பாக படிப்போம்…. கேள்விக்காக நாளினை போக்கிடும்…. கேள்வி ஞானம் உண்டாக்க செய்வோம்… எப்படி 1954இல் பாடி இருக்காங்க. இப்ப எவனாச்சு இந்த மாதிரி பாடி இருக்கானா ? நம்ம கலைஞருடைய பேரன் உதயநிதி…. இன்னைக்கு விளையாட்டு துறை அமைச்சர்…. அவர் ஏதாச்சும் அவருடைய படத்துல…. அவங்க தாத்தாவினுடைய கொள்கையை சொல்ல முடியாது….. இந்த மாதிரி கருத்து மிக்க பாடலை சொல்லி இருக்காரா ? அவரு சினேகாவை கட்டி பிடிப்பாரு, நயன்தாராவை கட்டிப்பிடிச்சு டூயட் பாடுவாரு…. அப்படி பின்னால டூவீலர்ல சந்தானத்தை வைத்து கேலி பண்ணுவாரு…. உண்மையா ? இல்லையா ? என பேசினார்.