செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், தமிழக அரசினுடைய இந்த ஒரு தலைபட்சமான நடவடிக்கை என்பதை நாங்கள் எதிர்க்கிறோம். எங்களுடைய தேசிய தலைவர் இம்மாதிரி தமிழக முழுவதும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள்,  அவர்கள் மீதான வழக்குகள்,  எப்படி எல்லாம் நியாயம் இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக கைது செய்யப்படுகிறார்கள் என்பதை பற்றி எல்லாம் விசாரிப்பதற்காக ஒரு குழுவினை அமைத்திருக்கிறார்.

கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர் திரு சதானந்த கவுடா  அவர்களின் தலைமையில்….  இன்னும் ஒரு மூன்று பேர்….  ஒரு  ராஜ்ய சபா எம்பி,  ஆந்திராவினுடைய தலைவர் திருமதி பிரந்தரேஸ்வரி அவர்கள்,  பெங்களூர் எம்பி திரு பி.சி மோகன் அவர்கள் எல்லாம் கொண்டு ஒரு குழுவினை அமைத்திருக்கிறார்கள். அந்த குழு தமிழகத்தில் பாதிக்கப்பட்ட எங்களுடைய கட்சி நிர்வாகிகளிடம் எல்லாம் கருத்துக்களை கேட்டு, அவர்களுக்கு அறிக்கை கொடுக்கும்.

அதே போல மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்களின் வீட்டின் அருகே நிறுவப்பட்டிருக்கின்ற கொடி கம்பத்தை இரவோடு இரவாக பெரிய தீவிரவாதிகள் ஆபரேஷன் பண்றது எல்லாம் கண்டுக்க மாட்டேங்குறாங்க….. இல்ல இன்னொரு பக்கம்,  நூற்றுக்கணக்கான அடி உயரம் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கொடிகள் நடைபாதையில்….. பிளாட்பார்ம்மில்…

பொதுமக்கள் அதிகம் நடமாடுகின்ற  இடத்தில் வைத்திருக்கிறார்கள்….  ஆனால் ஒரு கொடி கம்பத்தை இரவோடு இரவாக பிடுங்கி…  நூற்றுக்கணக்கான எங்களுடைய தொண்டர்கள் எல்லாம் கைது செய்து,  அடைத்து வைத்துவிட்டு….  இந்த கொடி கம்பத்திற்கு மிகப்பெரிய ஆபரேஷன் பண்ணி இருக்குது திராவிட முன்னேற்றக் கழக அரசு என தெரிவித்தார்.