யு-19 உலகக் கோப்பை மகளிர் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி..

19 வயதுக்குட்பட்ட பெண்கள் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதியது. இப்போட்டி போட்செஃப்ஸ்ட்ரூமில் உள்ள சென்வெஸ் பூங்காவில் இந்திய நேரப்படி மாலை 5.15 மணி முதல் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி கேப்டன் சஃபாலி வர்மா பந்து வீச முடிவு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணியின் துவக்க வீராங்கனைகளான கிரேஸ் ஸ்க்ரிவன்ஸ் (2) லிபர்ட்டி ஹீப் டக் அவுட் ஆகி வெளியேறினர். அதைத் தொடர்ந்து வந்த வீரர்களும் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் வருவதும் போதுமாக இருந்தனர.

இறுதியில் இங்கிலாந்து மகளிர் அணி 17.1 ஓவரில் 68 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அந்த அணியில் ரியானா மெக்டொனால்ட் கே 19 ரன்களும், அலெக்சா ஸ்டோன்ஹவுஸ் மற்றும் சோபியா ஸ்மால் தலா 11 ரன்களும் எடுத்தனர். இந்திய மகளிர் அணி தரப்பில் டைட்டாஸ் சாது, அர்ச்சனா தேவி,பார்ஷவி சோப்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், மன்னத் காஷ்யப், சஃபாலி வர்மா மற்றும் சோனம் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து இந்திய அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் சபாலி வர்மா அதிரடியாக நிலையில் 11 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து தொடங்கிய நிலையில், ஹன்னா பேக்கர் வீசிய 3வது ஓவரின் முதல் பந்தில் அவுட் ஆனார்.. அதேபோல 4வது ஓவரில் மற்றொரு துவக்க வீரர் ஸ்வேதா செஹ்ராவத் 5 ரன்னில் அவுட் ஆனார்.

அதன்பின் சௌம்யா திவாரி மற்றும் திரிஷா இருவரும் ஜோடி சேர்ந்து பொறுமையாக ஆடி வெற்றியை நெருங்கினர். பின் த்ரிஷா 24 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து ஹிரிஷிதா பாசு சௌம்யாவுடன் ஜோடி சேர 14 ஓவரில் 69 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது. சௌம்யா 24 ரன்களும்,  ஹிரிஷிதா ரன் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இதனால் இந்திய மகளிர் அணி முதல்முறையாக 19 வயதுக்குட்பட்ட பெண்கள் டி20 உலக கோப்பையை தட்டி சென்றது.