திருச்சி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், ஒரே இடத்தில் 300-க்கும் மேற்பட்ட ரவுடிகளைத் திரட்டி எஸ்.பி. அதிரடி காட்டியுள்ளார். பிடிபட்ட ரவுடிகள் அனைவரும் காவல்துறையினரால் எச்சரிக்கப்பட்டு, இனி வரும் காலங்களில் எவ்வித குற்றச் செயல்களிலும் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டனர். “சட்டம் முழுவதுமாக மாறிவிட்டது, கவனமாக இருங்கள்” என எஸ்.பி. விடுத்த எச்சரிக்கை வீடியோ இப்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் இன்று ஒரே இடத்தில் 300க்கும் மேற்பட்ட ரவுடிகளை ஒரே இடத்தில் ஆஜர்படுத்தி அதிரடி காட்டிய எஸ் பி 👌🏻
TVK power 🔥
இனி காவல்துறையினர் எந்த அழுத்தத்திற்கும் ஆட்படாமல் நேர்மையாக தங்கள் பணிகளை செய்ய முடியும்💪🏻 pic.twitter.com/egOMeOwnwV— priya (@PriyankaSmile01) May 10, 2026
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் இனி எந்தவித அரசியல் அழுத்தத்திற்கும் ஆட்படாமல் நேர்மையாகப் பணியாற்ற முடியும் என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி எனத் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ரவுடிகளை ஒரே இடத்தில் ஆஜர்படுத்தி காவல்துறையினர் காட்டிய இந்த ‘பவர்’, சமூக விரோதிகளுக்கு விடுக்கப்பட்ட பலமான எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
