சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “தங்கம்” எனும் தொடரின் வாயிலாக குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் ரவீணா. இவர் விஷ்னு விஷால் நடிப்பில் கடந்த 2018 ஆம் வருடம் வெளியாகிய “ராட்சசன்” திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதன்பின் ரவீணா, மௌனராகம்-2 சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.

இப்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றுள்ளார் ரவீணா. இந்த நிலையில் பைக்கை வேகமாக ஓட்டி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் TTF வாசனுடன் பைக்ரைடு சென்றுள்ளார் ரவீணா. அப்போது ttf வாசன் அதி வேகத்தில் சென்ற போது ரவீணா பின் இருக்கையில் இருந்து அலறி உள்ளார். இதுகுறித்த காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.