விளம்பரத்திற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் டிடிஎப் பாசனின் youtube சேனலை மூடிவிட வேண்டும் என்றும் நீதிபதி சிவி கார்த்திகேயன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது பைக்கில் சாகசத்தில் ஈடுபட்டதற்காக யூடியூப்பர் TTF  வாசன் கைது செய்யப்பட்டார். தற்போதுவரை அவர் நீதிமன்ற காவலில் இருக்கும் நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் TTF வாசன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு தொடர்பான விசாரணை தற்போது நடந்து வருகின்றது. இந்த வழக்கில் தற்போது நீதிபதி கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்த வழக்கில் நீதிபதி சி.வி கார்த்திகேயன், நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்திய  வழக்கில் கைது செய்யப்பட்ட அவரின் பைக்கை எரித்து விடலாம் என்று கருத்து  தெரிவித்து இருக்கிறார்கள்.3 லட்சம் ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உடை அணிந்திருந்ததால் தப்பியுள்ளார். 20 லட்சம் ரூபாய் மதிப்பில் உள்ள பைக்கை வைத்திருக்கிறார்.

மூன்று லட்சம் மதிப்புள்ள பாதுகாப்பு உடை அணிந்ததால் அவர் உயிர் தப்பி இருக்கிறார். TTF வாசனை  45 லட்சம் சிறார்கள் பின்பற்றி தவறான வழிக்கு செல்கின்றனர். TTF வாசன்  youtube சேனலில் அவரை 45 லட்சம்  சிறார்கள் பின்பற்றுகின்றார்கள்  என்பதால் அவர் அனைவருமே அனைவருமே அதிவேகமாக வாகனம் ஓட்டுவதன் மூலம் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகின்றனர் என்றும் காவல்துறையினர் தரப்பில் சொல்லி,

ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். விளம்பரத்திற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் TTF வாசனின் youtube சேனலை மூடிவிட வேண்டும் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்திருக்கிறார். சிறையில் TTF வாசனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி கார்த்திகேயன், TTF வாசனின்  ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.