
அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிகபட்சமாக 295 எலக்ட்ரோல் வாக்குகள் பெற்று அமெரிக்கவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்கிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு அமெரிக்கா சென்ற தோனி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பை ஏற்று டிரம்புடன் டிரம்ப் கோல்ப் மைதானத்தில் தோனி கோல்ப் விளையாடிய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் மீண்டும் பதவி ஏற்கும் சமயத்தில் ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படங்களை ட்ரெண்டாக்கி வருகின்றனர். தோனியின் ஜெர்ஸி எண் 7 இதனுடன் தேர்தல் நடைபெற்ற நாளை இணைத்து 6.11.2024 (6+1+1+2+0+2+4=16, 1+6=7) பல மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. தல தோனியின் ராசியான எண் 7. தல தான் காரணம் என புகழ்ந்து வருகின்றனர்.