அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட்டார். இவருக்கு உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்தார். இவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ட்ரம்புக்காக ஆதரவு தெரிவித்ததோடு, அவருடைய பிரச்சாரத்திற்காக நன்கொடையை வாரி வழங்கினார். அதோடு தேர்தலில் டிரம்புக்காக எலான் மாஸ்க் ரூபாய் .1000 கோடி செலவு செய்துள்ளார். இந்நிலையில் அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். அதன் பிறகு எலான் மஸ்கின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.
அதாவது அவரது சொத்து மதிப்பு 20.5 பில்லியன் டாலரிலிருந்து அதிகரித்து 285.2 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அது மட்டுமின்றி எலான் மஸ்கின் டெக்ஸா நிறுவனம் பங்குகளும் 13 சதவீதம் உயர்ந்து 286.10 அமெரிக்க டாலராக இருக்கிறது. இதை போன்று அவரது மற்ற நிறுவனங்களின் பங்குகளும் உயர்ந்துள்ளது. டிரம்ப் பிரச்சாரத்தின் போது தான் வெற்றி பெற்றால் எலான் மஸ்க்கு மந்திரி பதவி அல்லது ஆலோசகர் பதவி வழங்குவேன் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.