அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் குறித்து சர்ச்சையான தகவல் ஒன்று சமூக வலைதளத்தில் பரவி பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

டொனால்ட் டிரம்ப்பின் மகன் டான் டிரம்ப்பின் சமூக எக்ஸ் வலைத்தளம் மர்ம நபரால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதோடு அவரது எக்ஸ் வலைதள கணக்கிலிருந்து பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் “எனது தந்தை டொனால்ட் டிரம்ப் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். நான் 2024 அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன்” என டான் ட்ரம்ப் கூறுவது போன்றே அந்த பதிவு இருந்துள்ளது.

இதனைப் பார்த்த டொனால்ட் டிரம்ப் அது போலியான செய்தி என்று குறிப்பிட்டதோடு தனது மகனின் அக்கௌன்ட் ஹேக் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆனாலும் இந்த வதந்தி செய்தி சில நிமிடங்களிலேயே வைரலாக பரவியுள்ளது. அதே நேரம் சிறிது நேரத்திலேயே அந்த பதிவு எக்ஸ் தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.