இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியான வீடியோ ஒன்று மகளின் முதல் நாள் பள்ளிக்காக தந்தை செய்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது முதன்முறையாக பள்ளிக்குச் செல்லும் தனது மகளுக்காக தந்தை இசைக் குழு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். பள்ளியின் வாசலில் இசைக்குழு வாசிக்க அவருடைய மகள் வகுப்பறைக்குள் உற்சாகமாக சென்றார். இந்த நிகழ்வை பார்த்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அந்த சிறுமியை வியப்புடன் வரவேற்றனர்.

 

தனது மகளின் முதல் நாள் பள்ளி மறக்க முடியாததாக அமைய வேண்டும் என்று எண்ணிய தந்தையின் எண்ணம் இந்த வீடியோவில் காணப்படுகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

அதில் ஒருவர் “இதுபோல அப்பா கிடைக்கணும். இதுதான் உண்மையான பாசம்” என்று கூறியுள்ளார். மற்றொருவர் “ஒரு சிறு பிள்ளையின் பள்ளி வாழ்க்கை எப்படி மகிழ்ச்சியுடன் தொடங்க வேண்டும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு இது” என்று கூறியுள்ளார். மேலும் இந்த வீடியோ அனைவரது நெஞ்சையும் ஈர்க்கும் ஒரு சிறப்பான தருணமாக இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.