துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் கடந்த ஆறாம் தேதி அதிகாலை அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுகங்கள் ஏற்பட தொடங்கியன. மீட்பு படையினர் தொடர் நில அதிர்வுகளால் துருக்கி மற்றும் சிரியாவில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய குழந்தைகள், பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்களை பன்னாட்டு குழுவினர் உதவியுடன் மீட்டனர். இன்னும் மீட்பு பணிகள் தொடர்ந்து வருகின்றது. கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி துருக்கியின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் 7.8 என்ற ரிக்டர்  அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால் ஏராளமான கட்டிடங்கள் துருக்கியிலும் அண்டை நாடான சிரியாவின் வடக்கு பகுதியிலும் இடிந்து விழுந்தன. இரண்டாவது நிலநடுக்கம் 7.5 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்டது. இதனால் பாதிப்பு இன்னும் மோசம் அடைந்தது. மூன்றாவது நிலவடுக்கம் 6.8 என்ற ரிக்டர் அளவில் உருவாகி பேரழிவை ஏற்படுத்தியது. நிலநடுக்கத்தால் வெடிப்பு ஏற்பட்ட கட்டிடங்கள் அடுத்தடுத்து ஏற்பட்ட நில அதிர்வுகளின் காரணமாக தரைமட்டமாகின. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையிலும் பலி எண்ணிக்கை 50,000 ஐ தாண்டி இருக்கிறது.

நிலநடுக்கத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட ஐம்பதாயிரம் பேரில் 4218 பேர் துருக்கியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் சிரியாவில் 5914 பேர் இதுவரை நிலநடுக்கத்தால் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது. இரு நாடுகளிலும் மீட்பு பணியில் தொடர்ந்து வரும் நிலையில் நாட்கள் செல்ல செல்ல பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேலும் நிலநடுக்கம் காரணமாக 15 லட்சம் மக்கள் வீடற்ற மக்களாக மாறியுள்ளார்கள் என ஐநா அறிவித்துள்ளது.