துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலகையே பெரும் துயரத்தில் அழ்த்தியது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை பல்லாயிரத்தை தாண்டிய நிலையில் இன்னும் கூட அவ்வபோது அந்த நாடுகளில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது. இதனால் இந்த இரு நாடுகளின் துயரம் இன்னும் தீராததாகவே உள்ளது. துருக்கி மற்றும் சிரியா நாடுகளை தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் கூட அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகிறது.

இந்தியாவில் கடந்த 2005 ஆம் ஆண்டு காஷ்மீரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 80 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அதற்கு முன்பு 2001 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் கஜ் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் இறந்தனர். இந்த நிலையில் தற்போது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து நிலநடுக்கம் தொடர்பான ஆய்வுகள் செய்யப்பட்டு அதன் முடிவு அறிக்கைகளும் வெளியாகி உள்ளன.

அதன்படி தேசிய புவி இயற்பியல் ஆய்வு கழகத்தின் தலைமை விஞ்ஞானி என்.பூர்ண சந்திரதாவ் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, நிலநடுக்கங்கள் ஏற்பட காரணம் கண்ட தட்டுகள் நகர்வதால் தான். இந்திய கண்டதட்டு அதன் டெக்கானிக் பிளேட் என்பது ஆண்டுக்கு 5 சென்டிமீட்டர் நகர்ந்து கொண்டே இருக்கிறது. இது இந்தியாவில் மிகப்பெரிய நிலநடுக்கத்திற்கான சாத்தியங்களை அதிகப்படுத்தி இருக்கிறது. மேலும் இமயமலையில் நேபாளத்தில் வடக்கு மற்றும் இந்தியாவின் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் இடையே பெரும் இடைவெளியை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இது உத்தரகாண்டில் மிக மோசமான நிலநடுக்க பாதிப்பை எந்த நேரத்திலும் ஏற்படுத்தலாம் என விஞ்ஞானி என். பூர்ண சந்திராவ் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.