திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதாவது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு துறையில் சாதனை படைப்பதற்கு ஏற்ப தங்கும் வசதி, சத்தான உணவுகள் நல்ல பயிற்சி போன்ற பல வசதிகள் உடைய விளையாட்டு பள்ளிகள் மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் செயல்படுகிறது. இந்த விளையாட்டு விடுதிகளில் மாணவ மாணவிகள் செய்வதற்கு வருகின்ற 24-ஆம் தேதி தேர்வு நடத்தப்பட இருக்கிறது.

இந்த தேர்வு திருவாரூர் விளையாட்டு அரங்கில் மே. 24 ஆம் தேதி காலை 8 மணி அளவில் நடைபெற இருக்கிறது. இதில் மாணவர்களுக்கு 20 வகையான தேர்வு போட்டிகளும், மாணவிகளுக்கு 19 வகையான தேர்வு போட்டிகளும் நடைபெற இருக்கிறது. மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் வருகிற 23-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.