கடந்த 2018 ஆம் வருடம் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று லட்சக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் அதன் பிறகு பல்வேறு போராட்டங்கள் நடந்த பிறகும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாத காரணத்தினால் கடந்த 2018 மே 22 அன்று போராட்டம் கலவரமாக மாறியது. இதன் பின்னர் காவல்துறையினர் போராட்டத்தை அடக்குவதற்காக நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 ஆண்கள் இரண்டு பெண்கள் உட்பட 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த போராட்டத்தில் இறந்தவர்களுடைய ஐந்தாம் வருடம் நினைவு தினத்தை ஒட்டி வரும் மே 22ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகள் இயங்காது என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதாவது மே 22ஆம் தேதி தூத்துக்குடி செயல்பட்டுடு வரும் 53 மதுபான கடைகளும் மூடப்பட உள்ளதாக அறிக்கை வெளியாகி உள்ளது. இதையும் மீறி விற்பனை செய்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.