விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தேர்தலை நான் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. அதற்கு நான் முக்கியத்துவம் தருவதில்லை. மக்களை அமைப்பாக்க வேண்டும்.  அவர்களை அரசியல் சக்தியாக வலுப்பெற செய்ய வேண்டும் என்பதை தவிர,  எனக்கு வேறு முனைப்பும் இருந்ததில்லை. போராட்டக் களங்களை அமைக்க வேண்டும்… ஒதுங்கி கிடக்கிற… முடங்கிக் கிடக்கிற மக்களை உசுப்பி வீதிக்கு கொண்டு வர வேண்டும்.

அவர்களை போராடுகின்ற போர்க்குணம் உள்ள சக்திகளாக,  வலுப்பெறச் செய்ய வேண்டும் என்பதிலே மட்டுமே எனக்கு கவனம் இருந்தது. அதனால் பரீட்சைக்கு முதல் நாள் படிக்கிற மாணவனை போல,  தேர்தல் அறிவிக்கின்ற பட்ட பிறகு தான் தேர்தலைப் பற்றிய சிந்திக்கிற வழக்கம் எனக்கு இருந்தது. இதுதான் உண்மை…  ஏனென்றால் பத்தாண்டு காலம் தேர்தல் புறக்கணிப்பை ஒரு பிரச்சாரமாக எடுத்தவன்.

தேர்தல் அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று கருதி,  பொதுவாழ்வுக்கு வந்தேன். எப்படியாவது எம்எல்ஏ ஆகிவிட வேண்டும் என்று பொதுவாழ்வுக்கு வரவில்லை. எப்படியாவது எம்பி ஆகிவிட வேண்டும் என்று அரசியலுக்கு வரவில்லை. எப்படியாவது அதிகாரத்திற்கு வந்து விடுவோம் என்று… இல்லற வாழ்வு வேண்டாம் என்று நான் முடிவு எடுக்க வில்லை. பொதுவாழ்வில் அடி எடுத்து வைக்கும் போதே,  மக்களை அரசியல் படுத்த வேண்டும். அது மட்டும் தான் நோக்கம் என தெரிவித்தார்.