தமிழகத்தில் கல்வி முறைக்கு முக்கியத்துவம் வழங்கும் விதமாக பல்வேறு திட்டங்களை அரசு இந்த வருடம் அறிமுகம் செய்துள்ளது. அதே சமயம் அறிமுகம் செய்த திட்டங்களை செம்மையாக செயல்படுத்தியும் வருகின்றது. அவ்வகையில் டிஎன்பிஎஸ்சி நடத்தக்கூடிய தேர்வுகளில் தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசு பணிகளில் அமர முடியாத வகையில் டிஎன்பிஎஸ்சி சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவை நிதி அமைச்சர் பி டி ஆர் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழில் போதிய அறிவு இல்லாமல் விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்ற பணியில் அமர்ந்திருந்தாலும் பணியில் சேர்ந்த தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது