தமிழக அரசு துறையில் குரூப் 2, 2A பிரிவில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இன்று முதல் ஜூலை 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்துவதற்கு ஜூலை 19 கடைசி நாள். செப்டம்பர் 14ஆம் தேதி தேர்வு நடைபெறும் நிலையில் 2030 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தேர்வர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதாவது ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

தேர்வுக்கு விண்ணப்பிக்க முதலில் https://www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று கல்வித் தகுதி, முகவரி மற்றும் மொபைல் எண் உள்ளிட்டவற்றை பதிவு செய்து 150 ரூபாய் கட்டணம் செலுத்தி one-time registration செய்து பயன்பாட்டு முகவரி மற்றும் கடவுச்சொல் பெற வேண்டும். இதனை பயன்படுத்தி உள்ளே சென்றதும் apply online என்ற இடத்தை அழுத்தி திறந்ததும் அங்கு குரூப் 2, 2a என உள்ள இடத்தை ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து உள்ளே சென்று கேட்கப்படும் விவரங்களை நிரப்ப வேண்டும். விவரங்களை நிரப்பி புகைப்படம், கையொப்பம் மற்றும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

புகைப்படம் சமீபத்தில் எடுத்ததாக இருப்பது நல்லது. அடுத்து விண்ணப்பிப்பவரின் விவரங்கள் application details பகுதியில் one time registration பகுதியில் நீங்கள் கொடுத்த விவரம் இருக்கும். அதனை சரிபார்த்ததும் அடுத்த தொடர்பு விவரங்கள் கேட்கப்படும். அது தானாக நிரப்பப்பட்டிருக்கும். விவரங்களை சரியாக அளித்து சரிபார்த்து உறுதி செய்த பின்னர் ஆன்லைனில் கட்டணம் செலுத்த வேண்டும். பிறகு நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தொடர்ந்து உங்களுக்கான ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி அனுப்பி வைக்கும். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதியில் தேர்வு மையம் சென்று தேர்வை நீங்கள் எழுதலாம்.