2024 தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் அட்டவணை இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி ஜூலை 5ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை இத்தொடர் நடைபெற உள்ளது. சேலத்தில் நடைபெறும் முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் – சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன. நெல்லை, திண்டுக்கல், கோவை, சேலம் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது. இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.