செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பங்காரு அடிகளார் மறைவையொட்டி அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் நேரில் வந்து, பங்காரு அடிகளாரின் மனைவி மற்றும் அவருடைய ஆன்மீக  தொண்டர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது திருமாவளவன் புறப்பட்டு வேளையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோரையும் சந்தித்துக்கொண்டார். மற்றும் காரில் அமர்ந்திருந்த கேசவ விநாயக உடல் நலம் குறித்து திருமாவளவன் கை கொடுத்து நலம் விசாரித்து சென்றார்.