சாதாரணமாகப் புலிகள் மரங்களில் ஏறும் பழக்கம் கொண்டவை அல்ல என்ற நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ரணதம்போர் தேசிய பூங்காவில் புலி ஒன்று மரத்தின் உச்சாணிக் கிளையில் ஏறி அமர்ந்திருக்கும் அரிய வகை காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Faiz ul Islam (@mirzaa.faizan)

பொதுவாக சிறுத்தைகளே மரங்களில் ஏறுவதில் வல்லமை பெற்றவை என்பதும் புலிகள் தங்களது அதிகப்படியான உடல் எடை மற்றும் பருத்த நகங்கள் காரணமாக நிலத்திலேயே வேட்டையாடும் இயல்பு கொண்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வனவிலங்கு புகைப்படக் கலைஞர் ஃபைஸ் உல் இஸ்லாம் என்பவரால் எடுக்கப்பட்ட இந்தக் காணொளியில் அந்தப் புலி மரத்தின் உயரமான இடத்தில் அமர்ந்து கொண்டு கீழே உள்ள பகுதிகளைக் கண்காணிப்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.

இயற்கையின் இந்த விசித்திரமான மற்றும் அபூர்வமான நிகழ்வு தற்போது இணையத்தில் அதிகப்படியான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.