தூத்துக்குடி கடல் பகுதியில் அமாவாசை, பவுர்ணமி நாள்களில் கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் அந்நாட்களில் கடல் நீர் மட்டமும் உயர்ந்து இருக்கும். பின் வழக்கம் போல் மாறிவிடும். இந்நிலையில் நேற்று அமாவாசை முடிந்து 2 நாட்கள் கழிந்த பிறகும் கடல் சீற்றமாக காணப்பட்டதால் தூத்துக்குடியில் உள்ள தெற்கு பீச் ரோட்டில் இருக்கும் ரோச் பூங்கா பகுதியில் தூண்டில் வளைவு பாலம் நீரில் மூழ்கிய நிலையில் காணப்பட்டது.

மேலும் பூங்காவின் உள்பகுதியிலும் கடல் நீர் புகுந்து மற்றும் கடல் நீரும் வழக்கத்துக்கு மாறாக பச்சை நிறமாக காணப்பட்டது. இதன் பின் மாலை நேரத்தில் வழக்கம் போல கடல் இயல்பு நிலையை அடைந்தது. இந்த காட்சியை மக்கள் ஆச்சரியத்துடன் பார்க்க வந்தனர்.