இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். தற்போது வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களில் வெடிகுண்டு மிரட்டல்கள் வருவதாக விமான போக்குவரத்து துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன் அடிப்படையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 100க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளதாக தெரிவித்தது. மர்ம நபர்கள் ஈமெயில் மூலமும், சமூக வலைதளங்கள் மூலமும், தொலைபேசி மூலமும் மிரட்டல்கள் விடுக்கின்றனர். இந்த மிரட்டல் தகவல்களை கேட்டவுடன் விமான போக்குவரத்து துறை உடனடியாக அனைத்து விமானங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை சரி பார்க்க வேண்டி உள்ளது.

இந்த மிரட்டல்களின் அடிப்படையில் விமானங்களில் சோதனை நடத்தியதில் எந்த பொருள்களும் சிக்குவதில்லை. இந்த மிரட்டல்களில் பெரும்பான்மையானவை வெறும் வதந்தியாகவே உள்ளது. இதனால் விமான நிறுவனத்துக்கும், அரசுக்கும், சோதனை அதிகாரிகளுக்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இந்த மிரட்டல் செய்திகளை அறிந்த பயணிகள் விமானத்தில் பயணிப்பதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும் இந்த வதந்தியான மிரட்டல்களை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசனை கூட்டம் முடிவு செய்துள்ளது.

இவ்வாறு தொடர்ந்து மிரட்டல் விடுப்போருக்கு சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசு சார்பில் ஆலோசனை நடந்து வருகிறது என விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். ராம்மோகன் நாயுடு பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, கொடுக்கப்படும் வெடிகுண்டு மிரட்டல்கள் வெறும் வதந்தியாக இருக்கும் பட்சத்தில் விமான போக்குவரத்து துறை மற்றும் விமான நிறுவனம் கடுமையான விதிமுறை பின்பற்ற வேண்டிய சூழல் உருவாகிறது. இதனால் சிவில் விமான போக்குவரத்து சட்டம் 1982 இல் திருத்தங்களை கொண்டு வரவும் அரசு முடிவு செய்து வருகிறது.

இதுபோன்ற மிரட்டல்கள் தொடரும் நிலையில் மிரட்டல் செய்தி அனுப்பும் நபர்களை கண்டறிந்து அவர்கள் இனி விமானத்தில் செல்ல முழுவதுமாக தடை விதிக்கப்படும். இவ்வாறு விமான போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்தார். மேலும் இந்த மிரட்டல் அறிவிப்புகள் குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மிரட்டல் பின்னணியில் எதுவும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணையும் நடத்தி வருகின்றனர். இவ்வாறு தெரிவித்திருந்தார்