கோவை அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் கொங்கு அழகு தமிழில் பேசியதற்காக மிரட்டப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கோவை திமுக எம்பி கணபதி ராஜ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், அன்னபூர்ணா கோவையின் முகமாக பார்க்கப்படுகிறது. அவரை அவமானப்படுத்தியது கோவை மக்களை அவமானப்படுத்தியது போல் உள்ளது. மத்திய அரசின் ஜிஎஸ்டி கொள்கை காரணமாக பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், இது கொங்கு மண்டலத்தை பெரிதும் பாதித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அன்னபூர்ணா உரிமையாளர் தனிப்பட்ட வீடியோவை வெளியிட்ட விவகாரம் தனிமனித உரிமை மீறல் என்றும் கண்டித்துள்ளார். அண்ணாமலை வருத்தம் தெரிவித்ததாக கூறப்பட்டாலும், அது போதுமானதாக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தேர்தல் சமயத்தின் போதும் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அரசியல் பேசக்கூடாது என முதல்வர் ஸ்டாலின் கூறியதால் நாங்கள் அப்படி பேசவில்லை என்று தெரிவித்தார்.