
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று இப்போது IPL போட்டிகளில் மட்டும் விளையாடி வரும் தோனி, பல துறைகளிலும் கால்பதித்து வருகிறார். சென்னையின் எஃப்.சி கால்பந்து அணியின் உரிமை, ஓட்டல், உடற் பயிற்சிக் கூடம், இயற்கை விவசாயம் என பல தொழில்களில் தோனி முனைப்பு காட்டி வருகிறார். அதனடிப்படையில் “தோனி எண்டர்டென்மெண்ட்” எனும் பெயரில் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை அவர் துவங்கி உள்ளார்.
முன்பே தி ரோர் ஆஃப் தி லயன் எனும் ஆவணப் படத்தை தயாரித்திருக்கும் இந்த நிறுவனம், அடுத்ததாக ஒரு நேரடி தமிழ் படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தோனியின் தயாரிப்பு நிறுவனம் உருவாக்கவுள்ள முதல் படத்தின் அப்டேட் இன்று வெளியாகியுள்ளது. அதன்படி எம் எஸ் தோனி தயாரிக்கும் புதிய படத்தில் லவ் டுடே படத்தில் கதாநாயகியாக நடித்த இவானா மற்றும் பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகர் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முக்கிய இடத்தில் நடிக்கிறார்கள். மேலும் படத்தின் தலைப்பு மற்றும் ஹீரோ, ஹீரோயினி குறித்த அறிவிப்பு வீடியோவை எம்.எஸ் தோனியின் தயாரிப்பு நிறுவனம் தங்களுடைய அதிகாரப்பூர்வ twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

We're super excited to share, Dhoni Entertainment's first production titled #LGM – #LetsGetMarried!
Title look motion poster out now! @msdhoni @SaakshiSRawat @iamharishkalyan @i__ivana_ @HasijaVikas @Ramesharchi @o_viswajith @PradeepERagav pic.twitter.com/uG43T0dIfl
— Dhoni Entertainment Pvt Ltd (@DhoniLtd) January 27, 2023