நடிகர் ஷாருக்கான் நடிப்பில் “பதான்” படம் சென்ற 25-ம் தேதி உலகளவில் வெளியாகியது. சுமார்  4 வருடங்களுக்கு பின் ஷாருக்கான் படம் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை தீபிகா படுகோன், நடிகர் ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். பதான் படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்னதாக பல சர்ச்சைகளில் சிக்கியது

இந்த நிலையில் ஷாருக்கானின் பதான் திரைப்படம் பற்றி நடிகர் கமல்ஹாசன் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். அதில், “பதான் குறித்து நல்ல தகவல்களை கேட்டு வருவதாகவும், இப்படத்திற்கு தன்னுடைய வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார். அதோடு உங்கள் வழியில் செல்லுங்கள் சகோதரரே” என்று கமல் பதிவிட்டுள்ளார்.