இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (ஜன,.26) சேலம் மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இவர் ஆத்தூர் அருகில் உள்ள தலைவாசல் வந்த போது, தி.மு.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்றார்.

இதற்கிடையில் தொண்டர்கள் வரிசையாக அமைச்சர் உதயநிதியை அன்போடு வரவேற்றதோடு சால்வை அணிவித்துக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் கே.என்.நேரு தொண்டரை தாக்கியது மட்டுமின்றி, அவரை தள்ளிவிட்டு உள்ளார். இதுகுறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.