தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பாக ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு தொகையோடு, முழு கரும்பு, பச்சரிசி, வெல்லம் ஆகியவை வழங்கப்பட்டது. இதற்காக மக்களுக்கு முன்கூட்டியே டோக்கன்கள் வழங்கப்பட்டு நியாய விலைகள் கடைகள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டது. இதனால் மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினார்கள். இந்த நிலையில் தைப்பொங்கலுக்கு அரசு வழக்கமாக கொடுக்கும் இலவச வேட்டி, சேலைகள் இந்த ஆண்டு வழங்கப்படாததையடுத்து திமுக அரசுக்கு பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விலையில்லா வேட்டி சேலைகளை உடனடியாக நியாயவிலைக்கடை மூலம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். பொங்கள் முடிந்து 10 நாட்களுக்கு மேலாகியும் இலவச வேட்டி, சேலை இன்னும் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டினார்.