பிரபல தமிழ் நடிகை குஷ்பூ 90களின் கனவு கன்னியாக இருந்தவர். இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளியான பல படங்கள் வெற்றி படமாக அமைந்தன. கமல், ரஜினி, சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார் என பல திறமை வாய்ந்த நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு சினிமா தயாரிப்பாளர், சின்னத்திரை சீரியல் தயாரிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் உள்ளிட்ட பன்முகங்களை காட்டி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

சினிமா, அரசியல் என பரபரப்பாக இயங்கி வரும் குஷ்புவுக்கு ஏற்பட்ட விபத்தால் அவரது முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது அவரது ரசிகர்கள், கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இருந்தும் ஓய்வு எடுக்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். காலில் ஜவ்வு கிழிந்திருக்கும் நிலையில் பணி நிமித்தமாக அவர் டெல்லி செல்கிறார்.