தமிழ்நாடு சாலை விபத்துக்கள் அதிகம் ஏற்படும் மாநிலமாக இருப்பதால் அதனை தடுப்பதற்காக போக்குவரத்து விதிகள் கடுமையாகப் பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்காதது தான். அதனால் தற்போது போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கோவையில் புதிய மோட்டார் வாகனம் மசோதாவின் படி தலைக்கவசம் இல்லாமல் வருபவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு மோட்டார் வாகன சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. அபராதம் மட்டுமில்லாமல் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து மூன்று மணி நேரம் விழிப்புணர்வு வகுப்பு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.